குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக்கு அப்பாலான வசதிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியம் உண்டு என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்று வரும் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைக்கு அப்பாலான நலன்களை உறுதி செய்து கொள்ள இந்த மாநாடு வழியமைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மாநாட்டின் ஊடாக ஏனைய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். லண்டனில் ஆரம்பமாகியுள்ள இந்த மாநாடு பல்வேறு வழிகளில் நமக்கு நன்மைகளை அளிக்கும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.