Home இந்தியாபுத்தரின் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாது..

புத்தரின் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட மாட்டாது..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


தமிழகத்திலிருந்து கௌதம புத்தரின் புனிதப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. தமிழக பல்கலைக்கழகமொன்றில் புத்தரின் புனிதப் பொருட்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த புனிதப் பொருட்களை இலங்கை பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு ஏற்ற வகையில் இலங்கைக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கம் இது தொடர்பில் எம்.எஸ் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது. எனினும், இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழகம் முன்னதாக ஏற்றுக் கொண்ட போதிலும் பின்னர், புனிதப் பொருட்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு வேறும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, புத்தரின் புனிதப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படாது என தெரிவிக்கப்படுகிறது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More