2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் என்ற பிஃபா திட்டத்திற்கு ஐரோப்பிய லீக்குகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்வரும் ஜூன் மாதம் ரஷியாவில் 32 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதன்பின்னர் 2022-ல் கட்டாரில் உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக கட்டார் பிரமாண்டமான விளையாட்டு மைதானத்தினை அமைத்து வருகின்றது.
2018 உலகக்கோப்பையில் 32 அணிகள் பங்கேற்கின்ற நிலையில் 2022-ல் 48 அணியாக உயர்த்த பிஃபா திட்டமிட்டுள்ளது. 16 அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டால் 16 போட்டிகளில் அதிகமாகவும், நான்கு நாட்கள் கூடுதலாகவும் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டும்.
நான்கு நாட்கள் அதிகரிக்கப்பட்டால், ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதனால் ஐரோப்பிய லீக்குகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது