இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள கான்பூர் அருகே நடந்த புகையிரத விபத்தில் 96 பேர் உயிரிழந்துள்ளதாக உயர்ந்திருப்பதாக அதிகார பூர்வச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாட்னா இந்தூர் எக்ஸ்பிரஸ் புகையிரதம் கான்பூர் அருகே இன்று அதிகாலை தடம் புரண்டதாகவும் இதில் இது வரை 96 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், மேலும் 200 பேர் காயமடைந்திருப்பதாகவும் காயமடைந்தவர்களில் 76 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கான்பூர் உயர் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி பி.டி.ஐ.செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தின் போது 14 புகையிரத பெட்டிகள் தடம்புரண்டுள்ளதாகவும் மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை புகையிரத பாதையாக இருப்பதால் பல புகையிரத சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.