பொதுநலவாய கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரித்தானிய மகாராணி எலிசபெத் பக்கிங்காம் அரண்மனையில் இன்று தொடங்கி வைத்துள்ளார். தனக்கு பின்னர் இளவரசர் சார்ள்ஸ் பொதுநலவாய கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த மகாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் உரையாற்றிய 91 வயதான எலிசபெத் மகாராணி பொதுநலவாய கூட்டமைக்கு தனக்கு பின்னர் இளவரசர் சார்ள்ஸ் தலைமை தாங்குவார் எனவும் அவரது தலைமைக்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
உறுப்பு நாடுகளின் ஒப்புதல் பெற்ற பின்னரே தலைமை பொறுப்புக்கு சார்ள்ஸ் வரமுடியும் என்பதனால் அதற்கான பணிகள் நாளை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது