178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பதவிகள் செயற்குழுவின் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்படி கட்சியின் அரசியல் சபையினால் பரிந்துரை செய்யப்படும் பெயர்கள் வாக்கெடுப்பிற்கு விடப்பட உள்ளது. மத்திய செயற்குழுவின் வாக்கெடுப்பின் ஊடாக கட்சியின் முக்கிய பதவி நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து பல்வேறு யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
Spread the love