202
வலிகாமம் வடக்கில் கடந்த 13 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கட்டுவன் வீதியின் மேற்கு புறமாகவுள்ள (ஜே-240- தென்மயிலை, (ஜே 246 மயிலிட்டி வடக்கு), (ஜெ-247 தையிட்டி கிழக்கு) கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள் தமது காணிகளை உடனடியாக தமது கிராம சேவகரிடம் பதிவினை மேற்கொள்ளுமாறு தெல்லிப்பளை பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ கேட்டுகொண்டுள்ளார்.
காணிகளை துப்புரவு செய்யும் போது வெட்டிய மரங்களை அகற்றுவதற்கு பிரதேச செயலகத்தின் அனுமதியை பெற்றே அகற்ற வேண்டும் எனவும் இதனை மீறுவோர் பொலிஸாரின் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love