குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பங்களாதேஸின் குற்றச்சாட்டை மியன்மார் நிராகரித்துள்ளது. மியன்மாரின் ரோஹினியா முஸ்லிம்கள் நாட்டின் வடக்கு எல்லையின் ஊடாக பங்களாதேஸிற்குள் சரண் புகத் தொடங்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பங்களாதேஸினால் சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை மியன்மாரின் அரச ஊடகங்கள் நிராகரித்துள்ளன.
82 பேருக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை வழங்கியதாக பங்களாதேஸ் எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் கட்டளை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 82 ரோஹினியா முஸ்லிம்கள் சரண் புக முயற்சித்தனர் எனவும் அவர்களை திருப்பி அனுப்பி வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படகுகளின் ஊடாக இவர்கள் பங்களாதேஸை அடைய முயற்சித்தனர் என தெரிவித்துள்ளார். எனினும் இந்த தகவல்களை மியன்மார் மறுத்துள்ளது.