இந்திய எல்லையில் பாகிஸ்தான், சீனாவால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து ராணுவ தளபதிகள் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை டெல்லியில் ஆரம்பமான சிரேஸ்ட ராணுவ தளபதிகளின் 6 நாள் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதில் பாதுகாப்பு, பயிற்சிகள் உட்பட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இந்தநிலையில் நேற்றையதினம் காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவது குறித்து சிரேஸ் ராணுவ அதிகாரிகள் கலந்தாலோசித்துள்ளனர்.
மேலும், எல்லையில் பாகிஸ்தான், சீனாவால் சந்திக்கும் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிலவும் பதற்றம், தீவிரவாதத்தால் ஈர்க்கப்படும் இளைஞர்களை ஜனநாயக வழிக்கு திருப்புவது போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது