குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகம் வெப்பமயமாவதனை தடுக்க அமெரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பீஜி தீவுகளின் பிரதமர் பிராங் பெயினிமரமா( Frank Bainimarama ) கோரிக்கை விடுத்துள்ளார். உலக வெப்பமயமாவதனால் பசுபிக் தீவுகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்க்க அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
மாராகெச்சில் (Marrakech ) நடைபெற்ற உலக காலநிலை மாநாட்டில் பங்கேற்ற போது பீஜி பிரதமர் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் பசுபிக் தீவுகளுக்கு அமெரிக்கா வழங்கிய உதவியைப் போன்ற உதவியை தற்போதும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கூறுவதனைப் போன்று காலநிலை மாற்றம் பற்றிய தகவல்கள் பொய்யானவை கிடையாது என பீஜி பிரதமர் தெரிவித்துள்ளார்.