குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சிங்கள பௌத்த வாக்குகள் சிதறி உள்ளதாகவும், அந்த சிங்கள பௌத்த வாக்குகளை தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும், முன்னாள் மகாவலி அபிவிருத்தி மைச்சரும், சிங்கள பௌத்த கடும் போக்காளருமான காமினி திஸ்ஸநாயக்காவின் மகன் நவீன் திஸ்ஸநாயக்கா தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்ற அவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கிராமிய மட்ட மக்கள் இருப்பதாகவும், அனைத்து தரப்பினருக்கும் தௌிவாக விளங்கும் வகையிலான மாற்றம் ஒன்று கட்சியில் ஏற்படுத்த வேண்டு என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளிட்டவர்கள் இருப்பதாகவும் அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார். இந்த நிலையில் 30ம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.