Home இந்தியாகுழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை – மரணதண்டனைக்கு ஜனாதிபதி ஒப்புதல்…

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை – மரணதண்டனைக்கு ஜனாதிபதி ஒப்புதல்…

by admin

 

குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளோக்குவோருக்கு மரணதண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்வதற்காக சிறார் சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. இந்த அவசர சட்ட வரைவு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, இந்த சட்டம் அமுலுக்கு வருகிறது. சில மாதங்களில் கூட இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும். அதன்பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் இது நிரந்தர சட்டமாக அங்கீகரிக்கப்படும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More