ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியாற்றுவதற்காக, லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, 49 இலங்கை ராணுவத்தினர் தொடர்பிலான மனித உரிமை ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுமாறு அமைதிகாக்கும் படையின் பேச்சாளர் நிக்கி பர்ன்பெக் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவினூடாக ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் துரித கதியில் நடிவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கரிசனை காட்டுமென தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின், 49 இலங்கை இராணுவத்தினைரையும் திருப்பி அழைக்குமாறு அரசங்கத்திடம் கோரப்படுமெனவும், அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை அனுப்பும் நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வுகள் நிறைவடையும் முன்னரே, இராணுவத்தின் 49 பேர் கொண்ட குழுவொன்று கடந்த பெப்ரவரி மாதம் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதனையடுத்து ஏனைய இலங்கைப் படையினரை லெபனானுக்கு அனுப்பப்படுவதை ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் செயலகம் தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.