குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சஜித் பிரேமதாச மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோருக்கு கட்சியில் கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கத் தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டில் ரணில் விக்ரமசிங்க துடுப்பெடுத்தாடி சதம் பெற்றுக் கொண்டதாகவும், 2004ம் ஆண்டில் அவர் ஆட்டமிழந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2010ம் ஆண்டு மற்றும் 2015ம் ஆண்டுகளில் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன ஆகிய வெளி ஆட்டக்காரர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர் எனவும் இப்பொழுது கட்சியின் வீரர்களுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு தற்பொழுது வயதாகின்றது எனவும் இனி திரைப்படங்களில் காதலன் வேடத்தில் நடிக்கப் போவதில்லை எனவும், இனி அப்பாவாகவே நடிக்கப் போவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இதேவிதமாக மூத்த அரசியல்வாதிகளும் இளையவர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.