குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிக்கரகுவாவில் நலன்புரித் திட்டங்களை வரையறுக்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிக்கரகுவாவின் ஜனாதிபதி டேனியல் ஒர்டெகா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த புதிய சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் பாப்பாண்டவர், அமெரிக்க அரசாங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என கோரியிருந்தனர். மேலும் இந்தப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு எட்டப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சட்டம் ரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது