குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பக்கச்சார்பற்ற ஜனாதிபதி ஒருவரினாலேயே நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியும் என முன்னாள் நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி கொள்ளும் கலாச்சாரம் நீடிக்கும் வரையில் தேசிய அரசாங்கங்களை அமைப்பதில் எவ்வித பயனும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பக்கச்சார்பற்ற ஜனாதிபதி ஒருவரையே ஆட்சி பீடத்தில் அமர்த்தியதாகவும், அவர் தற்பொழுது அரசியல் குழப்பங்களில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்று துண்டுகளாக பிளவடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியும் பின்னடைவினை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள விஜயதாச ராஜபக்ஸ நாட்டின் அரசியல் கட்சிகள் வலுவாக காணப்பட்டாலே ஜனநாயகத்தைப் பலப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்