பார்சிலோனா நட்சத்திர வீரர் மெஸ்சி 126 மில்லியன் யூரோ சம்பளமாக பெற்று ரொனால்டோவை பின்னுக்குத் தள்ளியுள்ளார். கால்பந்து போட்டியில் சிநற்த வீரர் யார் என்பதில் லயனல்மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கடந்த பருவகாலத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 87.5 மில்லியன் யூரோ சம்பளம் வாங்கி முதல் இடம் பிடித்திருந்தார். மெஸ்சி 76.5 மில்லியன் யூரோ பெற்று 2-வது இடம் பிடித்திருந்தார். ஆனால் இந்த பருவகாலத்தில் சம்பளம், போனஸ் மற்றும் விளம்பர வருமானம் ஆகியவற்றின் மூலம் மெஸ்சி 126 மில்லியன் யூரோக்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மைதானத்தில் களம் இறங்கி விளையாடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 25 ஆயிரம் யூரோ சம்பளமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 94 மில்லியன் யூரோ பெற்று 2-வது இடத்தில் உள்ளார். நெய்மர் 81.5 மில்லியன் யூரோ பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.