தேசிய மின்னணு அடையாள அட்டை ஊழல் தொடர்பில் இந்தோனேசிய முன்னாள் சபாநாயகருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் 17 கோடி அமெரிக்க டொலர்கள் ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சபாநாயகர் சேட்யா நோவான்ட்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.
அவருக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணைகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தநிலையில் இன்றையதினம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . தண்டனை காலம் முடிந்து ஐந்தாண்டுகளுக்கு அவர் பொது பதவிகளை வகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது