குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பொதுச் செயலாளராக அகில விராஜ் காரியவசம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தேசிய அமைப்பாளராக அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும் பொருளாளராக ராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் சபைக் கூட்டம் நேற்று அலரி மாளிகையில் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன் போதே மேற்படி பதவிகளுக்கான தெரிவுகள் நடைபெற்றன.
இவர்களை தவிர ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாசவும் உப தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் உதவிப் பொதுச் செயலாளராக ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக்கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் கீழ் இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு இன்று கூடவுள்ளதுடன் புதிய நியமனங்கள் தொடர்பில் அங்கீகாரம் பெறப்படவுள்ளது. இதனை தவிர செயற்குழுவிற்கான புதிய உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட உள்ளனர்.