காவல்துறையினரின் பிரச்சினையை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையகம் அமைப்பது குறித்து 5 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையினருக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க கடந்த 2012-ம் ஆண்டு நீதிமன்றிம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது காவலர்கள் தொடர் தற்கொலை குறித்து நீதிபதி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதில் அதிகாரிகள் வீட்டில் உதவியாளர்களாக எத்தனை பேர் என்பது குறித்தும், இந்த முறை நீக்கப்பட்ட பிறகும் அது தொடர்வது ஏன் என்பது உட்பட 4 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதிகாரிகள் வீட்டில் உதவியாளர்களாக கடமையாற்றும் முறை முறை தற்போது இல்லை என என nதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட போதும் அதனை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் மீண்டும் முழுமையான பட்டியலுடன் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்தவழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தநிலையில் குற்றவாளிகளுக்கு குரல் கொடுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் காவலர்களுக்கும் மனித உரிமை இருப்பதை அறிந்துகொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
மேலும் காவல் துறையில் 18 ஆயிரம் வெற்றிடங்கள் இருக்கும் நிலையில் 10 ஆயிரம் காவலர்கள் அதிகாரிகள் வீட்டில் உதவியாளர்களாக இருப்பதாக தெரிவித்த நீதிபதி அதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவ்வாறு இருப்பவர்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.