குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ருவன்டாவில் பாரிய கூட்டு மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 1994ம் ஆண்டிலிருந்து இடம்பெற்ற இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக இந்த பாரிய கூட்டு மனித புதைகுழிகள் அமைந்திருக்கும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. காஸாபோ மாவட்டத்தில் இந்த மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இனச் சுத்திகரிப்பு நடத்தப்பட்ட காலத்தில் இந்தப் பகுதியில் சுமார் 3000 பேர் காணாமல் போனதாகவும் அவர்களின் உடலங்களாக இவை இருக்கக் கூடும் எனவும் மக்கள் கருதுகின்றனர். ஹூடு ஆயுததாரிகள் நூறு நாட்களில் சுமார் 800,000 டுட்ஸீ இனத்தவர்களை படுகொலை செய்திருந்தனர். இனச்சுத்திகரிப்பு சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட பலர் தண்டனையை பூர்த்தி செய்து சிறைச்சாலைகளிலிருந்து விடுதலையாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.