ஆந்திர மாநிலத்தின் சித்தூர் அருகே கோவில் திருவிழாவின் போது மக்கள் கூட்டத்திற்குள் பாரவூர்தி ஒன்று புகுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கு வந்த மக்கள் பிரதான வீதியின் அருகே நின்றுகொண்டிருந்தபோது சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற குறித்த பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை மீற மக்கள் மீது மோதிய விபத்து எற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இத்திலேயே மூவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய பாரவூர்தியின் சாரதி தப்பிஓடி விட்டதாகவும் காவல்துறையினர் அவரைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது