குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் மீண்டும் அரசாங்கத்தில் இணைய விரும்பம் தெரிவித்துள்ளதன் காரணமாகவே அமைச்சரவை நியமிக்கப்படுவது தாமதமாகி வருவதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகி மீண்டும் அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த மூன்று பேருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதன் காரணமாவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டம் ஆரம்பமாகும் தினத்தில் அல்லது அதற்கு முன்னர் இவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
இவர்கள் மூன்று பேரை தவிர மேலும் சிலரை அரசாங்கத்தில் இணைந்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.