குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது, அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்கின்றது. இந்தக் காரணத்தினால் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சீனி, பருப்பு போன்றவற்றின் விலைகள் அதிகளவில் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவை மோசமாக பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 159.03 ரூபாவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது