சென்னை உயர்நீதிமன்றின் தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள் மூடப்பட்டுள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தததனைத் தொடர்ந்து தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் மூடப்பட்டன.
இந்த கடைகளை தமிழக அரசு வேறு இடத்துக்கு மாற்றம் செய்தநிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மாநில நெடுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்டு மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன.
இதற்கெதிராக சமூக நீதிப் பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றில்; தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்து முறையாக அறிவிக்கப்படாத சாலைகளுக்கு அருகே மதுபானக்கடைகளை திறக்க தடை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அத்துடன் அதுபோன்று திறக்கப்பட்ட கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அந்த கடைகள் மூடப்பட்டுள்ளன.