குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம், 90 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்
33 மீற்றர் நீளமும் 4.2 மீற்றர் அகலமுடைய குறித்த பாலத்தின் கொங்றீட் பணிகளுக்கு, 35 மில்லியன் ரூபாவும், இரும்பு பாலத்துக்கு 55 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்பட்டு புதிய பாலம் அமைக்கப்பட்டு
‘மேற்படி பாலம், ஆயிரம் பாலம் திட்டத்துக்குக் கீழ் கொண்டுவரப்பட்டதோ அல்லது தற்போது ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமோ அல்ல. கடந்த சில வருடங்களுக்கு முன்னர், ஜக்கிய இராஜ்ஜியத்தின் நிதியுதவியுடன், 2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பணிகள் தற்போது நிறைவுற்று மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட மழையால் புதுமுறிப்புக் குளத்தில் நிரம்பிய நீர் காரணமாக பாலத்தின் புனரமைப்பு பணிகள் தாமதம் ஏற்பட்டது எனவும் இல்லை எனில் கடந்த வருடமே காலத்தின் பணிகள் நிறைவு பெற்றிருக்கும் எனவும் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்
பிரதேச சபைக்கு சொந்தமான வீதி ஒன்றுக்கு 90 மில்லியன் ரூபா செலவில் புதிய பாலம் ஒன்றை அமைத்து தங்களின் வாழ்நாள் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கிய வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கடந்த காலத்தின்அரசியல் தரப்பினர்களுக்கும் தங்களின் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளவதாக ஊற்றுப்புலம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்