கென்யா கிழக்குப் பகுதியில ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாரக்கணக்கில் பெய்துவரும் மழை வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை சுமார் 2 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
ஏப்ரல் மாதம் முதல் பெய்துவரும் இந்த மழையினால் இதுவரை 100 பேர் பலியாகியிருப்பதாகவும் இது ஒரு பேரழிவு இடர் எனவும் தெரிவித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம் இந்த மக்கள் உதவுவதற்கு நிதியுதவி தேவை எனவும் கோரிக்கை விடுத்துள்ளது
வடக்கு மற்றும் மத்திய கென்யாவின் முக்கிய வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது எனவும் எல்லா இடமும் வெள்ளக்காடாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் வாழ்ந்தவர்களின் வீடுகள் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் மீட்புப்பணிகள் நடைபெற்றலும் மேலும் மீட்புப் படையினர் தேவைப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் இதனை தேசியப் பேரிடராக அறிவித்தால்தான் இதற்கான நிதியைத் திரட்ட முடியும் எனவும் தேசிய பேரழிவு மேலாண்மை நிதியம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.