குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களில் நான்கு முறை அமைச்சரவையில் மாற்றங்களை செய்துள்ளதாகவும் இது மிகப் பெரிய கேலி எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவை விஞ்ஞானபூர்வமான முறையில் மாற்றயமைக்கப்படும் என தலைவர்கள் கூறியிருந்தாலும் வனஜீவராசிகள் அமைச்சு மாத்திரமே அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் நேற்று மாலை நடைபெற்ற தொழில் உரிமைகளுக்காக உயர்களை தியாகம் செய்த தொழிற்சங்க தலைவர்கள் உட்பட தொழிலாளர்களை நினைவுக்கூரும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நான்கு முறை மாற்றயமைக்கப்பட்ட அமைச்சரவையின் மூலம் அரசாங்கத்தி்ன் பிரச்சினை என்ன என்பது மிகவும் தெளிவாக புலப்பட்டுள்ளது. இப்படி அமைச்சரவையை மாற்றியமைக்கும் நாடு உலகில் இருக்கின்றதா என்பதும் கேள்விக்குரியது. அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி காலியில் நடைபெறும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.