குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டு இருந்தது உண்மை. எமக்கு விழவேண்டிய வாக்குகள் எங்கே போயுள்ளது என ஏன் யாரும் ஆய்வு செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ” தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும், அவை பயணிக்க வேண்டிய திசையும்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஈ.பி.டி,பி யிடம் மண்டியிட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதற்கோ, நாங்கள் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து ஆட்சி அமைத்ததற்கோ ஒரு சபையை காட்டுங்கள். ஆனால் அவர்கள் எங்களை கவிழ்த்ததற்கு ஒன்றல்ல நாலு சபையை நாங்கள் காட்டுவோம்
கரவெட்டியில் ஆட்சியை சுதந்திர கட்சியின் கைகளில் கொடுக்க முயற்சித்தார்கள் ஆனால் அது சாத்தியமாகவில்லை. ஆனால் நாங்கள் இதை எத்தனை தடவை சொன்னாலும் அது எடுபடவில்லை.
எங்களிடம் இருந்து போன வாக்கு எங்கே போயுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிடம் மூன்றில் ஒரு பகுதி தான் போயுள்ளது. மிகுதி மூன்றில் இரண்டு பங்கு எங்கே போயுள்ளது ? ஈ.பி.டி.பி.க்கு போயுள்ளது. அவர்களின் வாக்கு வங்கி இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஈ.பி.டி.பி.யில் இருந்து விலகிய சந்திரகுமாரின் வாக்குகளையும் சேர்த்தால் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை விட அதிகம் ஏனைய வாக்குகள் பெரும்பான்மை கட்சியிடம் போயுள்ளது.
இது தொடர்பில் ஏன் யாருமே ஆய்வு செய்யவில்லை. தமிழ் மக்களின் எண்ணோட்டம் தொடர்பில் எவரும் ஆய்வு செய்யவில்லை. என தெரிவித்தார்.
1 comment
பரதேசியே! சந்திரக்குமார் .ஈ.பி.டி.பியில்தானா இருக்கிறார்? அதில்தானா தேர்தலில் நின்றார்?