குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனியின் வரவு செலவுத் திட்ட யோசனை குறித்து அதிருப்தி வெளியிடப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் நிதி அமைச்சர் ஓலப் ஷோல்ஸ் ( Olaf Scholz ) வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்துள்ளார்.
பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் ஜெர்மனியின் வரவு செலவுத் திட்டம் அதனை பூர்த்தி செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்களும் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில் உள்நாட்டு ரீதியிலும் வெளிநாட்டு ரீதியிலும் இந்த உத்தேச வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேட்டோ பாதுகாப்பு செலவு இலக்குகளை அடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜெர்மனிய அதிபர் அன்ஞலா மோர்கல் தெரிவித்துள்ளார்.