குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நட்சத்திர அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மாட்ரீட் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் இருந்து விலகியுள்ளார். வில்லியம்ஸ் இதுவரையில் 23 கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அடுத்த வாரம் மாட்ரீட் ஓபன் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதான செரீனா இந்தப் போட்டித் தொடரில் இரண்டு தடவைகள் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செரீனா போட்டடிகளில் பங்கேற்காமை வருத்தமளிப்பதாகத் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செரீனா வில்லியம்ஸிற்கு கடந்த வருடம் குழந்தை பிந்துள்ள நிலையில் அவர் டென்னிஸ் களத்திற்கு திரும்பியிருந்த போதிலும் அவரால் இருந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து போட்டிக்கு தயாராக இன்னும் கடினமாக பயிற்சி தேவை என்பதனால்தான் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது