குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக ஒருவர் தினமும் இரண்டு லீட்டர் தண்ணீரை பருகுவது சிறந்ததது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த வெப்பமான காலநிலையில் தண்ணீரை அதிகமாக அருந்துவது முக்கியமானது. தண்ணீரை அருந்தும் போது தேசிக்காய், வெள்ளரிக்காய்களை வெட்டி தண்ணீரில் இட்டு அருந்துவது சிறந்தது. தண்ணீரை அருந்தாவிட்டால், தலைவலி, தலைச்சுற்றல், உடல் வலி போன்ற உபாதைகள் ஏற்படலாம். இதனை கவனத்தில் கொண்டு தண்ணீர், இளநீர், தோடம்பழச்சாறு போன்றவற்றை அருந்த வேண்டும்.
அத்துடன் சிறுவர்களுக்கு தினமும் ஒன்றரை லீட்டர் நீரை அருந்த கொடுக்க வேண்டும். தினமும் குளிப்பது சிறந்தது. மேலும் அதிகமாக வெளியில் பயணங்களை மேற்கொள்ளவதை தவிர்க்க வேண்டும். முடிந்தால் குடையை எடுத்துச் செல்லுங்கள். தலைக்கு தொப்பி அணியுங்கள். வெள்ளை ஆடைகளை அணிந்து வெளியில் பயணங்களை மேற்கொள்வது நல்லது எனவும் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.