குட்கா ஆலை முன்பு போராட்டம் நடத்தி கைதான தி.மு.க.வினர் 7 பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையத்தில் கடந்த வாரம் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுபற்றி தெரியவந்ததும் தி.மு.க.வினர் ஆலை முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் தி.மு.க.வினர் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன் 7 பேரை கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட தி.மு.க. வினர் 7 பேருக்கும் பிணை வழங்க வேண்டும் என தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டநிலையில் இந்தமனு மீதான விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் 7 பேருக்கும் நிபந்தனை அடிப்பi;யில் பிணை வழங்கப்பட்டுள்ளது