குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய அணியின் தலைவர் விராட் கொஹ்லி இங்கிலாந்தின் சர்ரே பிராந்திய அணியின் சார்பில் சில போட்டிகளில் பங்கேற்க உள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள போட்டிகளில் கொஹ்லி, சர்ரே பிராந்தியத்தை பிரதிநிதித்துவம் செய்ய உள்ளார். குறைந்தபட்சம் மூன்று பிராந்திய சம்பியன்ஸிப் போட்டித் தொடரிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் கொஹ்லி பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.
29 வயதான கொஹ்லி இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ஒருநாள் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விதமான போட்டிகளிலும் 50யும் விட அதிக சராசரி பெறுதியை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிராந்திய அணிகளுக்காக விளையாடுவது தமது நீண்ட கால கனவு எனவும் தம்மை தெரிவு செய்த சர்ரே நிர்வாகத்திற்கும் அலெக்ஸ் டுவர்டிற்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், இந்தப் போட்டிகளில் கொஹ்லி பங்கேற்கும் காரணத்தினால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கொஹ்லி பங்கேற்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஐந்து போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் ஒன்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இங்கலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டித் தொடரின் போது இந்திய அணியை கொஹ்லி வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.