Home இலங்கைசட்டவிரோதமான முறையில் மொரிசீயஸ் தீவுகளுக்கு சென்ற இலங்கையர்கள் கைது..

சட்டவிரோதமான முறையில் மொரிசீயஸ் தீவுகளுக்கு சென்ற இலங்கையர்கள் கைது..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


சட்டவிரோதமான முறையில் மொரீசியஸ் தீவுகளுக்கு சென்ற எட்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களினால் இந்த இலங்கையர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள், தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெருந்தொகைப் பணத்தை அறவிட்டு குறித்த இலங்கையர்களை மொரிசீயஸில் நிர்க்கதியாக்கி சென்றுள்ளனர். நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மொரிசீயஸ் அதிகாரிகள் இலங்கையர்களை கைது செய்துள்ளனர். இந்த இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சீசேலஸ் நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More