Home இலங்கைமன்னாரில் இன்று அதிகாலை 3 வீடுகள் மீது மின்னல் தாக்கம் – உடமைகள் சேதம் :

மன்னாரில் இன்று அதிகாலை 3 வீடுகள் மீது மின்னல் தாக்கம் – உடமைகள் சேதம் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னாரில் இன்று திங்கட்கிழமை(7) அதிகாலை முதல் கடும் இடி மற்றும் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் 3 வீடுகள் மீது மின்னல் தாக்கியுள்ளது. மூர்வீதி மற்றும் சாவக்கட்டு பகுதியில் உள்ள மூன்று வீடிகள் மீது இன்று அதிகாலை 4.45 மணியளவில் இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளது.

இதன் போது குறித்த வீடுகளில் உள்ள பெறுமதி மிக்க மின் சாதனப்பொருட்கள் உட்டப வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளதுடன் மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் அனைவரும் உறக்கத்தில் இருந்த நிலையில் மின்னல் தாக்கியுள்ள போதிலும் உயிரிழப்புகள் எவையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னல் தாக்கத்தின் அதி கூடிய சத்தத்தினால் குறித்த வீடுகளில் இருந்த சிறுவர்கள் உட்பட அனைவரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து மன்னார் காவல்துறையினர் ராணுவத்தினர்,பிரதேசச் செயலக அதிகாரிகள்,மாவட்டச் செயலக அதிகாரிகள்,அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More