குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தொடர்பான 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் இந்த மாதம் மூன்றாம் வாரத்தில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் 20வது திருத்தச் சட்டத்தை வெற்றி பெற செய்ய தேவையான நிலைப்பாடுகளை கட்டியெழுப்புவோம். இது குறித்து நாட்டில் உள்ள அனைவரிடமும் கலந்துரையாட தயாராக உள்ளோம். இது தொடர்பில் சிலரிடம் குறுகிய அரசியல் நோக்கம் உள்ளது. பொய்யான பூச்சாண்டிக்கு பயந்து இதனை திரும்ப பெற மாட்டோம் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.