குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நியூயோர்க் சட்ட மா அதிபர் எரிக் ஸ்கேனிடர்மேன் ( Eric Schneiderman )இலங்கை பெண் உள்ளிட்ட நான்கு பேரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ரான்யா செல்வரட்னம் (Tanya Selvaratnam ) என்ற பெண் உள்ளிட்ட நான்கு பெண்களை சட்ட மா அதிபர் எரிக் மிக மோசமாக துன்புறுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து எரிக் இன்றைய தினம் பதவிவிலகியிருந்தார்.
விருப்பத்திற்கு மாறாக எவருடனும் தாம் உறவு கொண்டதில்லை எனவும் பரஸ்பர விருப்பின் அடிப்படையிலேயே உறவு கொண்டதாகவும் எரிக் தெரிவித்துள்ளார். எனினும், மிகவும் மோசமானதும் கொடூரமானதுமான முறையில் தம்மை பாலியல் ரீதியில் எரிக் துன்புறுத்தினார் என ரான்யா செல்வரட்னம் தெரிவித்துள்ளார். வன்முறை வழிமுறைகளையே எரிக் பின்பற்றுவார் என அவர் தெரிவித்துள்ளார்.