குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அபுதாபியில் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மத்திய தேசிய பேரவையின் உறுப்பினர்கள் இந்த புதிய சட்ட வரைவுத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர். கழிவகற்றல் முகாமைத்துவத்தை நெறிப்படுத்தல், சுற்றாடலுக்கு தீங்கு ஏற்படும் கழிவுகளை வீசுவதனை வரையறுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. ஐக்கிய அரபு இராச்சியத்தில் வருடமொன்றுக்கு 6.5 மில்லியன் தொன் எடையுடைய கழிவுகள் குவிகின்றன. 75 வீதமான கழிவுகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. குப்பைகளை இடம் நகர்த்தல் மீள்சுழற்சி செய்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.