குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியாவில் பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்படாது என ஸ்பெய்ன் அறிவித்துள்ளது. கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதியும் தனிநாட்டு கோரிக்கையை முன்வைப்பதில் முதன்மையானவருமாக செயற்பட்ட கார்லெஸ் பூகிடமண்ட் ( Carles Puigdemont ) மீளவும் அரசாங்கப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள இடமளிக்கப்படாது என ஸ்பெய்ன் தெரிவித்துள்ளது.
கார்லெஸ் பூகிடமண்ட தற்பொழுது ஜெர்மனியில் தங்கியிருக்கின்ற நிலையில் நீதிமன்ற விசாரணைகளைப் புறக்கணித்து, நாட்டை விட்டு வெளியேறிச் சென்ற ஒருவருக்கு முக்கிய பதவி வழங்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்பெய்ன் அரசாங்கம்
தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படும் எனவும் எதிர்வரும் 22ம் திகதி கட்டலோனிய தலைவர்கள் கூடி ஜனாதிபதியை தெரிவு செய்ய உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.