குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பெற்றோலின் விலை 20 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பிலான விலைப் பொறிமுறைமைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி விரைவில் எரிபொருட்களுக்கான விலைகளில் திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானுடான அணுத் திட்ட உடன்படிக்கையை அமெரிக்கா ரத்து செய்துள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தால் உலக சந்தையில் எரிபொருளுக்கான விலை உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 20 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 40 ரூபாவினாலும் உயர்த்தப்படலாம் என சமூக ஊடகங்களில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.