யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் யுத்த சூழலில் அரசாங்க அதிபராகப் பணியாற்றிய சிலரில் நீண்டகாலம் பணியாற்றிய பொலிகண்டியை பிறப்பிடமாகவும் கொழும்பு சொய்சாபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணேஷ் 10.05.2018 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். இறுதிக் கிரியைகள் கிழவி தோட்டம், கரவெட்டியில் உள்ள அன்னாரது இல்லத்தில் 11.05.2018 ம் திகதி வெள்ளிக் கிழமை பி.ப .12.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
திரு கணேஸ் அவர்கள் யுத்தகாலத்தில் மேற்கொண்ட கடினமான பணிகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்ட மக்களாலும் தமிழ் மக்களாலும் மறக்கப்பட முடியாதவை. அவரது யுத்தபாலப் பணிகள் குறித்த மதிப்பீடுகள் உன்னதமானவை… எனினும் இந்த உன்னதங்களையும், சிறந்த பண்புகளையும், அர்ப்பணிப்புகளையும், தியாகங்களையும் கொண்ட அரச அதிகாரிகள் அரச போகங்களில் கிறங்கிப் போகும் பொழுது தமது தனித்துவத்தையும், அறத்தினையும் இழந்து பதவிகளுக்காகவும், பட்டங்களுக்காகவும் விழக்கூடாதவர்களின் கால்களில் வீழ்ந்து சரணாகதி அடையும் துர்ப்பாக்கியம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின், தோற்கடிக்கப்பட்ட போராட்டத்தின் பின் அரங்கேறி வருகிறது… அதற்கு அரச அதிபர் கணேசும் பலியாகிப் போனமை வேதனையானதே…
அவரின் மறைவின் போது இந்த விடயத்தை மீள ஞாபகப்படுத்துவது தேவைதானா? என்ற கேள்விகளிடையே 2010ஆம் ஆண்டு ஜூலை 13ல் குளோபல் தமிழ்ச் செய்திகளில் வந்த இந்த செய்தியினை மீள்பதிவு செய்கிறோம். மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடுகின்ற இனத்தில் இருந்து உயர் பதவிகளில் அமருகின்ற அதிகாரிகள் மட்டும் அல்ல, அனைத்து அதிகாரிகளின் பணிகளும் குறைந்தபட்சம் அறம்சார்ந்தவையாக அமைய வேண்டும் அல்லவா….
ஆ.ர்
முன்னைய பதிவின் இணைப்பு…