மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையை சட்டக் கல்லூரி மாணவர் பிரபாகரன் படைத்துள்ளார். மலேசியா நாடாளுமன்ற தேர்தலில் பத்து என்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார் பிரபாகரன். இத்தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட கெஅடிலான் கட்சி வேட்பாளர் தியன், பிரபாகரனுக்கு தமது ஆதரவைத் தெரிவித்திருந்தார்.
இத்தொகுதியில் 4 முனை போட்டியை எதிர்கொண்டு அமோக வெற்றியைப் பிரபாகரன் பெற்றுள்ளார்.. இதற்கு முன்னர் 1976-ம் ஆண்டு 23 வயது இளைஞராக போட்டியிட்டு, முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வெற்றிபெற்றார். கடந்த 42 ஆண்டுகாலமாக மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சரித்திரத்தை நஜீப் தக்க வைத்திருந்தார். இதனை முறியடித்து பிரபாகரன் புதிய சரித்திரத்தை எழுதியுள்ளார். பொதுத்தேர்தலில் வென்று பிரதமராகும் மகாதீரையும் பிரபாகரன் சந்தித்து வாழ்த்து பெற்றார். 92 வயதாகும் மகாதீர்தான் மலேசியா நாடாளுமன்றத்தின் மிகவும் வயதான உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.