Home இலங்கைஐக்கிய தேசியக் கட்சி பிரதம நிறைவேற்று அதிகார பதவியொன்றை உருவாக்க உள்ளது…

ஐக்கிய தேசியக் கட்சி பிரதம நிறைவேற்று அதிகார பதவியொன்றை உருவாக்க உள்ளது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

ஐக்கிய தேசியக் கட்சி பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியொன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளது. கட்சியின் அனைத்து நிர்வாக விவகாரங்களையும் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இந்த பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் வழங்கப்பட உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளரது அனைத்துப் பணிகளுக்கும் பூரண அளவில் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த பதவி உருவாக்கப்பட உள்ளது. கட்சி மறுசீரமைப்பு குறித்து ருவான் விஜேவர்தன குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைக்கு அமைய இந்த நியமனம் மேற்கொள்ளப்பட உள்ள போதிலும் இதுவரையில் இந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. அரசியல் விவகாரங்களில் பங்கேற்காத, பாராளுமன்றில் அங்கம் வகிக்காத ஒருவரே இந்தப் பதவியில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More