குளோபல் தமிழ்ச் செய்தியார்..
ஈரான் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஈரானின் ஆறு நபர்கள் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிப்படைப் பிரிவுடன் தொடர்பு பேணிய தரப்பினர் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை விதிக்கப்பட்ட அனைவரும் ஈரானிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் திறைசேரியினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகளுடன் ஈரான் செய்து கொண்டிருந்த அணுத் திட்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டுள்ள நிலையில் அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.