Home இலங்கைவவுனியா சிறைச்சாலை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

வவுனியா சிறைச்சாலை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

by admin


வவுனியா சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கைதியொருவர் நீதிமன்றத்தில் செய்திஐந்த முறைப்பாட்டுக்கமைய இன்று மனித உரிமைகள் ஆணைக்குழு அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சட்டத்தரணி ஆர்.எம்.வசந்தராஜா தலைமையில் சிறைச்சாலைக்கு சென்ற குழுவினர் அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்துள்ளதுடன் கைதிகளிடம் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கைதி ஒருவர் விசாரணைக்காக நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டபோது சிறைச்சாலையில் கைதிகளுக்கெதிராக இடம்பெறும் அநீதிகளை நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் சட்டத்தரணிகளும் சிறைச்சாலையில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More