Home இலங்கைகாணாமல் போனோரின் உறவினர் போராட்டங்களை, காணாமல் ஆக்கும் கலந்துரையாடல்…

காணாமல் போனோரின் உறவினர் போராட்டங்களை, காணாமல் ஆக்கும் கலந்துரையாடல்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் இன்று (12.05.18) முதல் ஆரம்பிக்கப்படும் என காணாமல் போனவர்கள் சம்பந்தமான அலுவலகம் தெரிவித்துள்ளது

மன்னார் பிரதேசத்தில் இருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவித்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், காணாமல் போனவர்கள் சம்பந்தமான தகவல்களை உறவினர்களிடம் பெற்றுக் கொள்வது அவர்கள் அரசாங்கத்திடம் எதிபார்க்கின்ற பதில் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை காணாமல் போனோர் அலுவலகத்திற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. நிர்வாக அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்ததுடன், விசாரணை அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் நாட்களில் கோரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More