Home இலங்கை“நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”

“நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம்”

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தீர்மானிப்பார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கோத்தாதய ராஜபக்ச எம்பிலிப்;பிட்டிய கொட்டகவெல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை.ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் வேட்பாளர் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானிப்பார். மகிந்த ராஜபக்ச முடிவு ஒன்றை அறிவித்தால் அது தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுப்பேன். நாங்கள் மிகவும் ஐக்கியமாக வாழும் குடும்பம் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More