எபோலா வைரஸ் நோய் மீண்டும் பரவி வருகின்ற நிலையில் அனைத்து உலக நாடுகளும் அவதானமாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு மேற்காபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா நோய் 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்து பரவி வந்த நிலையில் இதன்காரணமாக 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 11 ஆயிரத்து 310 பேர் உயிரிழந்துள்ளனர். 2016-க்கு பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட எபோலா நோய் இப்போது கொங்கோ குடியரசு நாட்டில் மீண்டும் பரவியுள்ளதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 2 பேர் மட்டுமே எபோலா வைரசினால் உயிரிழந்ததை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 36 பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிசசை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் அனைத்து உலக நாடுகளும் அவதானமாக வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது