,
கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக அண்மையில் அறிவித்திருந்தமைக்கமைய இன்று கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்பபட்டது. இதற்கெதிராக காஸா எல்லைப்பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்கள் மீத துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 41 கொல்லப்பட்டதாகவும் சுமார் ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒருமாதத்துக்குள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்; என்பது குறிப்பிடத்தக்கது.